தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 28 ஏப்ரல், 2016

24/04/2016 அன்று கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் வழக்கிற்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது.தோழர் முத்துக்குமார் தலமை வகித்தார் ,தோழர் வடிவேலு,கோவை மாவட்ட செயலர் தோழர் ரவிச்சந்திரன் தோழர் பல்லடம் சண்முக சுந்தரம்,தோழர் உடும;லை பழனிச்சாமி மற்றும் மாநில உதவிச்செயலர் ஊள்ளிட்ட  சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள்  கலந்துகொண்டனர்,  தலமை ஏற்றுப் பேசிய தோழர் முத்துக்குமார் வழக்கில் நாம் ஜெயிப்பது நிஜம் அதேவேளையில் வழக்கிற்கான இந்த சிறப்புக் கூட்டத்தில் இவ்வழக்கிர்க்கு  மூலகாரணமாக இருக்கும் அகில இந்திய உதவிப் பொதுச்செயலர் தோழர் செல்லப்பா ,மற்றும் தோழர் முருகையா ஆகியோரை நாம் கண்டிப்பாக நினைத்துப்பார்க்க வேண்டும் .அவர்களால் தான் இந்த வழக்கு போடப்பட்டது என் நெகிழ்ச்சியோடு கூரினார்.அதன் பின்  மாவட்ட செயலர் தோழர் ரவிச்சந்திரன் பேசுகையில் ரயிலில் அன்ரிசர்வில் கஸ்டப்பட்டு பயணித்த கதையையும் வழக்கு நமக்கு சாதகமாக இருப்பதையும் தொழிலார் நலம் சார்ந்தவரே ஜட்சாக கிடைக்கப்பெற்றமையால் வெற்றிக்கனி என்பது கைகெட்டும் தூரத்தில் தான் உள்ளது என்பதை உள் உணர்வோடு பகிர்து கொண்டார் ,அதன் பின் பேசிய தோழர் வடிவேலு அவர்கள் இதுவரை எந்தெந்த தேதிகளில் எல்லாம் சென்னை க்கு பயணித்ததையும் அங்கு ஒவ்வொருநாளும் நடைபெற்ற நிகழ்வுகளையும் நம் கன்முன்னே காட்சிப்படுத்தி விளக்கியது வந்திருந்த எல்லோருக்கும் ஒரு நம்பிக்கையையும் புது உத்வேகத்தையும் ஏற்ப்படுத்தியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .அனைத்துத் தோழர்களுக்கும் கோர்ட் பீஸ் மற்ரும் போக்குவரத்திற்கான செலெவு பணத்தை உடனடியாக செலுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கச் செய்த்தது குறிப்பிடத்தக்கது.அதன் பின் உரையாற்றிய தோழர் சுந்தரக்கண்னனும் கோர்டில் நடைபெற்ற  சில நிகழ்வுகளை எடுத்துக்கூறியதோடு  நமக்கு போடப்பட்ட  கோர்ட்பீசை கட்டயம் செலுத்தவேண்டியதன் தேவையையும் அதேநேரம்  மாவட்ட செயலரின் தகவல்படி இதுவரை சுமார் ரூ.19000 வரை செலவுகள் ஆகிவிட்டன அதர்கான தொகையான ரூ.300 ம் உடனடியாக செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திப்பேசினார்.













தலைப்பைச் சேருங்கள்