தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 6 ஜனவரி, 2018

திருப்பூர்பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் மாநாடுகோரிக்கை


தீக்கதிர் செய்தி
ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துக
பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் மாநாடு கோரிக்கை
திருப்பூர், டிச.31-
பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் கிளைகளின் மாநாடு சனியன்று நடைபெற்றது. தேசிய கொடியை ஜி. தமிழ்செல்வி, சங்ககொடியை வி.வி மினியன் ஆகியோர் ஏற்றிவைத்தனர். இந்த மாநாட்டிற்கு கிளை தலைவர்கள் டி.சாமியப்பன், எம்.பிரபு ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளார் டி.ரவிச்சந்திரன் துவக்க உரையாற்றினார்.
சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ஏ.முகமது ஜாபர், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் எஸ் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.இந்த மாநாட்டில் திருப்பூர் தலைமை அலுவலக கிளையின் தலைவராக செந்தில்குமார், செயலாளராக ரமேஷ், பொருளாளராக சுப்பிரமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், பிச்சம்பாளையம் புதூர் அலுவலக கிளையின் தலைவராக கனகராஜ், செயலாளராக அருண் தேவசகயாம், பொருளாளராக அஜீத் குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்த மாநாட்டில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ, இபிஎப், போனஸ் போன்ற சட்டபூர்வமான சலுகைகளை முழுமையாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.